இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்.
வெறுமனே அண்ணாவின் பெருமைகள் பேசியோ, சாதனைகள் பற்றி எழுதியோ கடந்துபோக மனம் இசையவில்லை, மாறாக அண்ணாவை வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அதுவும் இன்றே தொடங்குவது பொருத்தமானதாக இருக்குமென்றும் தோன்றுகிறது.
அண்ணாவை நான் அறிவேன், ஆனால் அண்ணாவின் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமே இல்லை. அண்ணாவின் எழுத்துக்கள் எப்படி பரிச்சயமில்லையோ அதே அளவிற்கு பொருளாதாரமும் எனக்கு பரிட்சயமில்லை. ஆகா இரண்டும் ஒருசேர எனக்கு பரிச்சயப்படவேண்டும். அது எப்படி சாத்தியப்படும் என்று நான் சிந்தித்து தேடிக் கொண்டிருந்தபோது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியனில்’ மீள்பதிவு செய்யபட்டிருந்த கலைஞரின் நேர்காணலில் பத்து தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றாக அண்ணாவின் பணத்தோட்டத்தை அவர் குறிபிட்டிருந்தார். பார்த்தகனமே அந்த புத்தகத்தை தேடியலைந்தேன். கிடைக்கவில்லை. மறுபதிப்பே செய்யபடாமல் இருந்தது.
ஒரு ஞாயிறன்று விஐய் தொலைக்காட்சி நீயா நானாவில் அண்ணா குறித்த விவாதம் ஒன்றை நிகழ்த்தியது. அதில் கலந்துகொண்ட ஆழி செந்தில்நாதன் பணத்தோட்டம் குறித்தும் அண்ணாவின் பொருளாதார சிந்தனை இன்றைக்கும் பொருந்தி நிற்பது ஆச்சரியமாக இருக்கிறதென்றும் சிலாகித்தார். அவ்வளவுதான் மனம்கிடந்து அலைபாய்ந்தது.
பணத்தோட்டம்…. பணத்தோட்டம்…. பணத்தோட்டம்….
தேடி அலைந்தபோது யத்தேச்சையாக ஆழி செந்தில்நாதனின் முகநூல் பதிவொன்றை பார்த்தேன். ஆழி செஞ்சுவடிகள் என்ற வரிசையில் பணத்தோட்டத்தை மறு பதிப்பு செய்து தனது பதிப்பகமான ஆழி பதிப்பகத்தின் வழியாகவே இந்த சென்னை புத்தக கண்காட்சியில் அவர் வெளியிடுவதாக பதிவிட்டிருந்தார். அலையாய் அலைந்த மனம் சும்மா கிடக்குமா? வாங்கினேன் பணத்தோட்டத்தை.
பேரறிஞர் அண்ணாவின் ஆகபெரும் படைப்பான ‘பணத்தோட்டம்' இப்போது என் கையில்.
வாசிக்க துவங்குகிறேன் இன்று. அதுவே அண்ணாவிற்கு நான் சொலுத்தும் அஞ்சலி.
▼
No comments:
Post a Comment