நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தச் செய்தி பொதுவெளியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அது கொடுத்த தாக்கத்தை சாமானியர்களின் பேச்சில் இயல்பாகவே காண முடிந்தது. நேற்று திருச்சியில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். இந்த மரணம் குறித்து மிகவும் வருந்தினார், புலம்பினார்.
"சரி இதுக்கெல்லாம் உங்களால என்ன பண்ண முடியும்ன்னு நீங்க நினைக்குறீங்க" என்று புலம்பிக்கொண்டிருந்த நண்பரிடம் நான் கேட்டேன்.
அவர் சொன்னார் " அடுத்த முறை ஓட்டு போடும்போது சரியான ஆளான்னு பாத்து ஓட்டு போடுவேன்"
"சரியான ஆளுக்கு ஓட்டு போடறதால இதெல்லாம் சரியாகிடுமா? உங்களோட ஒரு ஓட்டு இங்க எல்லாத்தையும் மாத்திடுமா?"
அவர் அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை, தான் சொன்னதையே தீர்வாக அவர் நம்புவதாக தெரிந்தது.
நான் மேலும் தொடர்ந்தேன்
" இங்க மக்கள educate பண்ணாம எதுவும் மாறாது, நாம போடுற ஓட்டு இங்க ஒருமாற்றத்தையும் கொண்டுவராது. மொதல்ல இங்க மக்களுக்கு கற்பிக்குணும், மக்கள ஒண்ணு சேர்க்கணும் இதை செய்யாம கிளர்ச்சி செய்யமுடியாது, கிளர்ச்சி செய்யாம எந்த மாற்றத்தையும் இங்க கொண்டுவர முடியாது"
இதை நான் சொல்லவில்லை அம்பேத்கார் அன்றே சொன்னார் "கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்"
No comments:
Post a Comment