![]() |
வடிவமைப்பு: விஜய் |
தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக் கொண்டிருந்த கதாசிரியர் ஒருவழியாக இறுதி கட்டத்தை வந்தடைந்து மெல்லிய குரலில் கதை சொல்லிக்கொண்டிருந்தார்
“எல்லார் நல்லத்துக்காகவும் பாடுபட்ட கதாநாயகன் வில்லனால கொடூரமா சிலுவையில அறைஞ்சு கொலை செய்யப்படுறான் . எல்லோரையும் சோகம் கவ்வுது எதிரிகள் கூட்டம் கும்மாளமடிக்குது.
நாயகன் தரப்ப சேந்தவங்க கதறி அழுது அவன் உடலை இறக்கி மெல்லிய துணியில சுத்தி, போர்த்தி, சுமார் முப்பது கிலோ வெள்ளைப்போளமும், சந்தனத் தூளையும் அவன் உடலோடு வைச்சு கட்டுராங்க.
கல்வாரி மலைகிட்ட ஒரு தோட்டம் இருக்குது. அந்தத் தோட்டத்துல மலையைக் குடைஞ்சு உருவாக்கப்பட்ட ஒரு கல்லறை.
அந்தக் கல்லறையில நாயகன அடக்கம் செய்றாங்க. கல்லறை வாசல்ல ஒரு பெரிய கல்ல வெச்சு அடைச்சிடறாங்க. சங்கிலியால கட்டுறாங்க. காவலுக்கும் ஆள் நிறுத்துறாங்க. அப்டியே screen fade பன்னி சோகமான வயலின் இசையோட முடிக்கிறோம்”
கதை மொத்தத்தையும் கேட்ட தயாரிப்பாளர் வருத்தத்தோடு
“என்ன தம்பி negative ending story யா, மக்கள் ஏத்துக்குவாங்களா? முதலுக்கு மோசாமாயிட போவுது”
“என்ன தம்பி negative ending story யா, மக்கள் ஏத்துக்குவாங்களா? முதலுக்கு மோசாமாயிட போவுது”
கதாசிரியர் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு சொல்கிறார் “ சரி சார் இந்த இடத்துலதான் கதையில ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்”
“என்ன ட்விஸ்ட் தம்பி” ஆவலுடன் தயாரிப்பாளர்.
“மூனாவது நாள் காலை !” அதிரடி திருப்பத்தை கதாசிரியர் தொடங்க
தாயரிப்பாளர் இடைமறித்து
தாயரிப்பாளர் இடைமறித்து
“ காரியம் பன்னப்போறோமா தம்பி?”
“அட நீங்க ஒரு ஆளு சார். கதைய கேளுங்க.
மூனாவது நாள் காலை!
திடீர்னு நிலநடுக்கம். நிலம் அதிருது கல்லறைய காவல் காத்த காவலர்கள் பயந்து போறாங்க. அந்த மலையே குலுங்குது.
திடீர்னு வெள்ள டிரஸ் போட்ட இரண்டு வானதூதர்கள் வானத்துல இருந்து இறங்கி வந்து கல்லறை கிட்ட நிக்கிறாங்க. காவலர்களுக்கு அல்லில்ல.
சட்டுனு கல்லறையைக் கட்டிவைச்சிருந்த சங்கிலிகள் உடைஞ்சு தெறிக்குது. கல்லறையை மூடி வெச்சிருந்த கல் உருண்டோடுது.
கதாநாயகன் உயிரோட வெளியே வராரு !
கதாநாயகன் உயிரோட வெளியே வராரு !
காவலர்கள் வெலவெலத்துப் போய் தெறிச்சு ஓடுறாங்க அப்டியே கட் பன்னி to be continued மத்ததெல்லாம் பார்ட்-2 ல”
பிரமித்துப்போன தாயாரிப்பாளர் “ ஓ… fantasy கதையா தம்பி…. சூப்பர் சூப்பர்”
தயாரிப்பாளருக்கு இப்போதுதான் உயிர் வந்தது.
தயாரிப்பாளருக்கு இப்போதுதான் உயிர் வந்தது.
தயாரிப்பாளருக்கு மட்டுமா!!!!!!!!
No comments:
Post a Comment