"தாய்மை என்பது பெண்ணை அடிமையாக்க, ஆண் கண்டுபிடித்த ஒரு ஏமாற்றுச் சொல். தாய்மை என்ற ஒரு சொல்லாடலே ஒரு பித்தலாட்டம், ஒரு மோசடி. பெண்கள் அதற்கு ஒருபோதும் அடிமையாகிவிடக்கூடாது" என்று அன்றே சொன்னார் பெரியார். அவர் அவர் சொன்னதை இன்று பொருத்திப் பார்த்துச் சிந்தித்தால் எவ்வளவு பொருந்திப் போகிறது.
பொழுதுக்கும் ஆக்கிப் போட்டு, துணித் துவைத்து, பணிவிடை செய்து நான்கு சுவற்றுக்குள் தானே அவளது உலகத்தை நாம் சுருக்கி வைத்திருக்கிறோம்.நாள் முழுக்க தாயவள் அடுமனையில் தானே முடங்கிக் கிடக்கிறாள் அல்லது கிடத்தப்படுகிறாள்.
இந்த அன்னையர் தின கொண்டாட்டமெல்லாம் வெற்று நாடகம், மேலும் பெண்களை
வீட்டிற்கு வெளியே வரவிடாமல் அவர்களது சிந்தனைகளைச் சதா குடும்பத்தை சுற்றியே சுழல வைக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சூழ்ச்சி, பொய், புரட்டு. "இல்லை இல்லை இப்போதெல்லாம் பெண்கள் வெளியே வந்துவிட்டார்கள் வேலைக்கு போகிறார்கள்" என்று மல்லுகட்டுவீர்கள் என்றால் நான் கேட்கிறேன் உங்கள் வீட்டில் யார் சமையல் செய்கிறார், யார் துணி துவைக்கிறார், யார் எச்சில் பாத்திரம் கழுவுகிறார். மிக நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் அது ஒரு பெண்,அவள் ஒரு தாய்.

"இல்லை இல்லை எங்க வீட்ல சமையல்காரி இருக்கா, பாத்திரம் கழுவ, துணி துவைக்க வேலைகாரி வருவா" என்று சமாளித்தால் இப்போதும் கேட்கிறேன் அவள் யார்? அவளும் தன் பிள்ளைக்களுக்காகத் தன் பிள்ளைகளின் வாழ்க்கைக்காகத் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன்னுடைய நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு தாய் தானே! அப்படியிருக்க எதற்கிந்த போலியான கொண்டாட்டம், எதற்கிந்த பித்தலாட்டம்.........
Sema.....Ethana generation vanthalum intha thought marave maraathu. punitham nu Solra pen adimai thanam.......Oru silarnaala matram kandipa varave vaarthu....Oru pennuku first ethiriye oru pen than...
ReplyDelete