Saturday, 16 June 2018

நேதாஜித் தேவர்

சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு அருகில்  ஒரு தேசியத் தலைவரின் சிலை  இருக்கிறது. பைக்கில் செல்லும்போது அந்த சிலையை சரியாக கவணிக்காத நண்பர் " யார் சிலைடா அது" என்று கேட்டார்.

நான் " அது தேவர் சிலை என்றேன்"

சட்டென்று நண்பருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. பைக்கை நிறுத்தி அந்த சிலையை திரும்பிப் பார்த்தார். அவர் சந்தேகம் சரிதான், அது தேவர் சிலை அல்ல நேதாஜியின் சிலை. நண்பர் என்னை ஒரு முறை முறைத்து "இதுதான் உங்க ஊர்ல தேவர் சிலையா?" என்று நேதாஜி சிலை இருந்த இடத்தை காட்டி என்னிடம் கேட்டார்.

அதற்கு நான் "எங்க ஊர்ல இருந்திருந்தா இது நேதாஜி சிலைதான். ஆனா இந்த ஊர்ல இருக்கதால இது தேவர் சிலை. ஏன்னா தேவர் கம்யூனிட்டல  நேதாஜிய இவனுங்க சேத்து ரொம்ப காலமாகிடுச்சு"என்று சொன்னதோடெ நிறுத்திவிடாமல் " அடுத்து நம்ம அல்டிமேட் ஸ்டார்க்கு சிலை வெச்சாலும் வெப்பாய்ங்க என்றும் சொல்லி வண்டியை எடுக்கச் சொன்னேன்.

ஒரு சிலை எங்கிருக்கிறது, அது யாரால் வழிபடப்படுகிறது, யாரால் கொண்டாடப்படுகிறது என்பதில் இருக்கிறது அது யார் சிலை என்று.

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...