Friday, 17 November 2017

அவனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.




சாலையின் எதிர்புறத்தில் ஒரு பெண். பேரழகி. பார்த்துக் கொண்டேயிருக்க மனம் சொல்கிறது, கண்கள் கேட்கிறது. சரி பார்ப்போம் என்று பார்த்தால் உள்ளுக்குள் மெல்லிசாக ஒரு பய உணர்வு. நான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால்? அந்த பயம் எழுந்து அடங்குவதற்குள் அவள் பார்த்துவிட்டாள். நான் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவளை. கண்டும் கானாதது  போல் அவள் வேறெங்கோ பார்த்தாள். பின் என் பக்கம் விழி சாய்த்தாள்.  என் பார்வைக்கு, அவளின் பதில் பார்வை. குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் ஓடோடிக் கொண்டேயிருக்கிறது. வாகனங்கள் கடக்கின்ற கனத்தில் கிடைக்கின்ற இடைவெளியில் அவளை நான் நோக்குகிறேன், கிடைக்கின்ற இடைவெளியில் அவளும் என்னை  நோக்குகிறாள். 

அந்த தார் சாலை, அந்த தந்தி கம்பம், அந்த அடர்த்தியான கடைத் தெரு எல்லாம் ஏனோ எங்கோ மறைந்தது. 

கண் முன்னே கண்களுக்கு எட்டிய தொலைவில் ஆள் அரவமில்லாமல்,  ஒரே வெற்றிடம். அனல் காற்று, அக்கம் பக்கம் யாருமில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் எதிர் திசையில் புழுதி பறந்து எழுகிறது. அது என்னை நோக்கித் தான் வருகிறது. கண்களுக்கு புழுதி மட்டுமே புலப்படுகிறது. அருகில் வர வர அது  பெரும் படை. ஈட்டியும், கேடயமும், வாளும் ஏந்தி சிப்பாய்களும், தளபதிகளும், எனக்கு பெயர் தெரியாத இன்னபிற போர் வீர்ர்களும் ஆராவாரத்தோடு குதிரையில், யானையில் பின்னே அனிவகுத்து வர முன்னே அவள் ரதத்தில் கம்பீரமாக உடைவாள் ஏந்தி. நான் தனித்து நிற்கிறேன் நிராயிதபானியாக. அந்த காட்சியை நான் பிரமித்துப் பார்க்கிறேன். அந்த பெரும் படை என் முன்னே சில நூறு அடிகள் மட்டுமே இடைவெளியில். நான் அவளை மட்டுமே பார்க்கிறேன். அந்த பெரும் படை கூட்டி வந்திரிக்கும் கடும் புழுதியிலும் அவள் விழியை நோக்குகிறேன். அவள் என்னை நோக்கி வாளை உயர்த்தி ஏதோ சொன்னாள். பெரும் சப்தத்தில் காதில் எதுவும் விழவில்லை. கன நேரம் தான் அவள், அந்த  பெரும்படையை கொண்டு என்னை வீழ்த்திவிட்டு எங்கோ போய்விட்டாள். 

நான் நிதானத்திற்கு வருகிறேன். அதே தார் சாலை, அதே தந்தி கம்பம், அதே அடர்ந்த கடைத் தெரு போர்களமுமில்லை பெரும் படையும் இல்லை.அதே சாலையில்தான் நான் இன்னும் நிற்கிறேன். அதே சாலையின் எதிர்புறத்தில்தான் அவளும் நிற்கிறாள் அதே பார்வையோடு  என் கண்ணெதிரே.

இந்த உணர்வைத் தான் வள்ளுவன் இப்படி சொன்னானோ!

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண் டன்ன துடைத்து 

3 comments:

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...