Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 21 January 2020

வெறுமையின் வெளிச்சம்

ஏதோவொன்றிலிருந்து விடுபட
எப்போதும் ஏதோவொன்றைத் தேடி
அலைந்தபடியே இருக்கிறேன்
ஏதோவொன்றை தேடிப் பிடித்து பற்றிக்கொண்டால்
அது பாடாய் படுத்துகிறது
பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கிறது
எனக்குள்ளே எனக்காகவென்று எப்போதும் இருக்கிற இரைச்சல் போதாதென்று இவைகள் வேறு
விழிகளை மூடி படுக்கையில் கவிழ்ந்தால்
விழிகள் பிதுங்கிக் கொண்டு
இமைகளை துருத்துகிறது
உறக்கத்தை தொலைத்து வருடங்களாகின்றன
உறங்குவதற்கு ஒரு மடி தேடியே
சதா அலைகிறேன்
சாத்தானின் மடிக்கு கூட சாத்தியமில்லாமலாகிறபோது
அமைதிக்கு நான் எங்கே போவது
யாரை தேடுவது
அறை முழுவுதும் புகையின் நெடி
சாராய நாற்றம்
வெறுமையே வெளிச்சம்
மீதமாய் கிடைத்த சில்லைறைகளையெல்லாம்
அடுக்கி வைத்து அண்ணாந்து பார்க்கிறேன்
இந்த வாழ்க்கை  இந்த அமைதி
என்னை ஒரு பிச்சைக்காரனாய் பார்க்கிறது
இன்னமும் நான் ஏதோவொன்றிலிருந்து விடுபட
ஏதோவொன்றை பற்றிக்கொள்ள
அலைந்தபடியே இருக்கிறேன்






Sunday, 24 November 2019

அவைகள் எங்கிருந்து கிளம்பி வருகின்றன
உறுதியாக சொல்ல முடியவில்லை. கறையான்களை போல யாருக்கும் தெரியாமலேயே வருகின்றன.
நின்று நிதானமாக
கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல்
வயிற் புடைக்க தின்று தீர்த்தது அவைகளுக்கு போதாதாம்
பற்களை கூர் தீட்டிக் கொண்டு விடிந்ததும் வருமாம்
சொல்லிவிட்டு செல்கின்றன.
இப்போது
அவைகள் எங்கு செல்கின்றன?
நம்புங்கள்!
எனக்கெதுவும் தெரியவில்லை

Wednesday, 9 October 2019

குறியின் பசி


அவனவனுக்கு மணமுடிக்க பெண்ணே கிடைக்க வில்லையென்று
குறிகளை மறைத்துக் கொண்டு அல்லாடுகிறான்
90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமே ஆகாதென்று
சிலர் பகடி செய்துக் கொண்டிருக்கிறார்கள்
நான், அவளைப் புணர்வதற்கு  இடம் தேடித் திரிகிறேன்

தெருக்கள்தோறும் சாலைகள்தோறும்
அவளை இழுத்துக் கொண்டே திரிகிறேன்
எல்லா வீடுகளின் சன்னல்களும்
எல்லா வீட்டு கதவுகளும்
அடைத்தே இருக்கின்றன
அடைக்கப்பட்ட சன்னல்களைப் பாரத்துக் கொண்டும்
தாழிடப்பட்ட கதவுகளை கடந்துக் கொண்டும்
நான் மண்டைச் சூடேறி நடக்கிறேன்
எல்லா சன்னல்களுக்கு உள்ளிருந்தும்
ஒற்றை முனகல் சத்தம்
தடித்த ஆண் குரல்வளைகளிலிருந்து எழும் முனகல் சத்தம்
பெண்களின் குரல்கள்? அது காணவில்லை
யார் கவலைக் கொள்வார்? நான் கவலைப்பட்டேனா?
நான் இழுத்த இழுப்பிற்கு என் நிழலைப்போல ஓடிவருகிறாள்
அவள் குரலை நான் கடைசியாக எப்போது கேட்டேன்
நினைவில் கூட இல்லை.

அவள் மணிக்கட்டு சிவந்து கிடக்கிறது
வலி பொறுக்காமல் அவள் நடையின் வேகம் மட்டுப்பட்டுக் கொண்டே வருகிறது
நான் பொருட்படுத்தினேனா?
என் குறியின் பசிக்கு
நான் தீனி போட்டாக வேண்டும்.
என் குறியின் பசிக்கு நான் விதைத்தாக வேண்டும்
விதைத்ததை அறுவடை செய்தாக வேண்டும்
விதைப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் நிலம்?

வீடற்று வீதியில் ஒதுங்கி
நடைமேடையில் கூட்டத்தோடு ஒண்டி வாழ்பவனுக்கு
விதைப்பதற்கும் அறுவடை செய்துக் கொள்வதற்கும்
காலமும் நிலமும் ஏது?

வீதிகளெங்கும் திரிகிறேன்
தூரத்தில் ஒரு ஆண் நாய்
பெட்டை நாயின் புட்டத்தை மோப்பம் பிடித்தபடி நகர்கிறது
பெட்டை நாய் இசைந்து கொடுக்கிறது
என் நிழலை, நான் திரும்பிப் பார்க்கிறேன்
நிழலின் மேல் அவளே தெரிகிறாள்
மணிக்கட்டில் வலி அவளுக்கு, பசிவேறு
வயிற்றுப்பசி தான், என் பசியல்ல
அவள் என் புட்டத்தை மோப்பம் பிடிக்கவில்லை
இசைவுத் தெரிவிப்பாள் என்று கூட எனக்கு தோன்றவில்லை
இருந்தும் நான் இடம் தேடித் திரிகிறேன்
அவளைப் புணர்வதற்கு


Friday, 4 January 2019

புகை

இவன் இயற்கை எய்தினானென

யாரும் சொல்லத்தேவையில்லை

என் சாவிற்கான அத்தனை காரணங்களையும்

கொடுத்துவிட்டே போகிறேன்

அதிலொன்று விரலிடுக்கில் 

சுவாசித்துக் கொண்டிருக்கிறது

Wednesday, 20 September 2017

பனித் துளி

அவள் கூந்தல்
தொட்டு
தொலைந்துவிட
இரவெல்லாம்
தவமிருகிறது
பூவில் படர்ந்த
பனித்துளி............

Saturday, 12 August 2017

உறக்கம்

உறக்கம் உறுதியான ஒன்று
சிலருக்கு படுத்ததும் வந்துவிடும்
பலரை அது பாடாய்படுத்தும்
உறக்கம் உறுதியான ஒன்றுதான்
ஆனால்
உறங்கியவர் எவரும் விழிக்கபோவதில்லை

Thursday, 8 June 2017

தேன் நிலவு

உன் வளைவு நெளிவுகளை
பார்ப்பதற்கும்
தொட்டு- காமத்தீ
குழிப்பதற்கும்தானா
இத்தனை 
வளைவு நெளிவு கடந்து
மலை உச்சியில்
குளிர்ந்து கிடக்கிறேன்
உன் மொத்தம் கண்டு
என் புத்தி பிரண்டு
சித்தம் கலங்கி
உன் பாதம் பனிந்து

அம்மம்மா! நீ
கட்டிலின்மேல் ராட்சசி
கட்டவிழ்க்காதே என்மேல்
காமத்தீ

ஐய்யையோ!
பகல் எது – இரவெது
பைத்தியம் பிடிக்கிறது

பாவம்! நானோர் பிள்ளை
நித்தம் உன் தொல்லை
விழிகொண்டு வீழ்த்தி
உன் மார்பில்  
என் முகம் புதைக்கிறாய்
உன் இடையில்
என் விரல் வளைக்கிறாய்
அதன் மடிப்பில்
எனை திருடுகிறாய்
உன் பாதம் எத்தி
என் மார்பை மிதித்து 
உன் பக்கம் இழுத்து
முத்தம் வைக்கிறாய்
இதழ் முத்தம் பறிக்கிறாய்

கட்டிலின்மேல் ராட்சசி நீ
நிதமும் கிடைக்குமா
இதே தரிசனம்?

இந்த தேன் நிலவைப்போல்
எல்லா இரவுகளும்
முதல் இரவுகளாகவே இருக்கட்டும்

முற்றும் துறப்போம்
ஆடைகள் மட்டும் அல்ல
ஆண் பெண்னென்ற பேதங்களையும்

கர்வம் கலைப்போம்
காமம் தீர்ப்போம்
காமம் கடந்து
காதல் வளர்ப்போம்
உன்மேல் நானும்
என்மேல் நீயும்…..



Thursday, 1 June 2017

பாவம் அந்த கடவுள்

இறைவன் என்பீர்கள்
வாய் நிறைய
நிதர்சனத்தில்
பாவம் அந்த கடவுள்
தினம் தினம்
மார் பிடித்து இழுத்து
வெடுக் வெடுக்கென
முளை காம்பிழுத்து
நா ருசிப்பீர்கள்
உடல் வளர்ப்பீர்கள்
வா வந்து
என் மார் வருடு
அதை தீண்டித் திளை
தொட்டு ரசி
அருந்தி மகிழ் என்று
விரும்பி வந்து
பால்மடி காட்டியதா? பசு
இப்படி ஒரு பக்தன்
எந்த கடவுளுக்கு வாய்ப்பான்
இது வதை என்று
தெரியவில்லையா?
ருசிக்கு ஒருவேளை பாலின்றி
இருந்திடுமா?
தடை சொல்லும் - உங்கள்
பணம் படைத்த தடித்த நாக்குகள்?
தடை விதிப்பதற்கு முன்னால்

Saturday, 20 May 2017

மீண்டும் காதலானேன்

மீண்டும் காதலானேன்
நேற்று ஒருவனை காதலித்தேன்
அடித்து மிதித்து பயமுறுத்தி
எவனோ ஒருவனுக்கு
தாரை வார்த்தார்கள்
நட்பும் இல்லை
காதலும் இல்லை
இதுநாள் வரையில்
நதியில் விழுந்த மரகட்டையாக
நகர்ந்த என் வாழ்வில்
எங்கிருந்தோ வந்தான்- நட்பானான்
பின்னொருநாளில் காதல் என்றான்
கட்டியவன் காட்டாத
அன்பை, காதலை
கண்டநாள் முதல்
அள்ளி என்மீது தெளிக்கிறான்
நான் மீண்டும் காதலானேன்
மீண்டும் எல்லோரும் வந்தார்கள்
வேண்டாம் என்றார்கள்
இம்முறை என் காதலுக்கு
புது பெயரும் வைத்திருந்தார்கள்
‘கள்ளக் காதல்' என்று
மே 2017

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...